latest update karnan movie: தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கௌரவத்துடன் வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ் இவர் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார். இந்நிலையில் தற்போது கர்ணன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் சமீபத்தில் அசுரன் எனும் திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களை அசர வைத்தார் தற்போது ஜகமே தந்திரம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது ஒரு திரைப்படத்தில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பரியேறும் பெருமாள் எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மாரிசெல்வராஜ் கர்ணன் திரைப்படத்தில் படம் பிஸியாக நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ரெஜிஷா என்பவர் நடித்து வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது தனுஷின் 49வது திரைப்படமாகும் மேலும் இந்த திரைப்படத்தில் காமெடி நாயகனாக பிரபல காமெடி நடிகர் யோகிபாபு அவர்கள் நடிக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படமானது ஒரு ஜாதி கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் கர்ணன் திரைப்படத்திலிருந்து கண்ட வர சொல்லுங்க என்னும் பாடலானது வெளியாகி சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த பாடலை தொடர்ந்து தற்போது மற்றொரு பாடல் ஒன்று வெளியாக உள்ளது.
இந்த பாடலுக்கு தலைப்பாக திரௌபதி முத்தம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இயக்குனர் மோகன் எடுத்த திரௌபதி திரைப்படம் ஆனது தலித் மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படம் என்று அரசல் புரசலாக பேசப்பட்டன.
Paadal -3'Draupathaiyin Muttham'
With immense delight,we bring you the third song from #Karnan on March11.The Kiss of Draupathai.@theVcreations @dhanushkraja @Music_Santhosh @thenieswar @EditorSelva @RamalingamTha @thinkmusicindia @LaL_Director @rajishavijayan @KarnanTheMovie pic.twitter.com/Xen9WGv6ov— Mari Selvaraj (@mari_selvaraj) March 9, 2021
இந்நிலையில் அதற்கு எதிராக கர்ணன் திரைப்படத்தின் கதை அமையும் என பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பாடல் ஒன்று இருக்க வைக்கப்பட்ட தலைப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் மோகன் வெளியிட்ட டுவிட் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
அவரவர் எண்ணம் போல் அவரவர் வாழ்க்கை அமையும். அவரவர் சிந்தனை போல அவரவர் செயல்கள் அமையும்..
அக்னிக்கு எதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்.. அக்னி தாய்க்கும் அப்படித்தான்.. யாரலும் அசுத்த படுத்த முடியாது.. உங்கள் செயலுக்கான முடிவை அவளே பார்த்து கொள்வாள்.. pic.twitter.com/UoCRz19P4r— Mohan G Kshatriyan 🔥 (@mohandreamer) March 10, 2021