தாலியை கழட்டவே மாட்டேன்.. மாரிமுத்துவின் மனைவி அதிரடி.!

marimuthu
marimuthu

Ethirneechal Marimuthu: கணவர் மறைந்த பின்னரும் தாலியை கழட்ட மாட்டேன் என்ற முடிவில் எதிர்நீச்சல் மாரிமுத்துவின் மனைவி தீர்க்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலின் மூலம் ஆதி குணசேகரனாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் மாரிமுத்து. 35 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பணியாற்றி வரும் மாரிமுத்துவிற்கு எதிர்நீச்சல் சீரியல்தான் திருப்புமுனையாக அமைந்தது.

இதற்கு முன்பு கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார். மேலும் 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் இதன் மூலம் கிடைக்காத புகழ் எதிர்நீச்சல் சீரியலின் ஆதி குணசேகரன் கேரக்டர் பெற்று தந்தது. இவ்வாறு ஆதி குணசேகரனாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த மாரிமுத்து புகழின் உச்சத்திற்கு சென்றார்.

இவ்வாறு இதன் மூலம் பிரபலமாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அப்படி அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரின் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து கமலஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களையும் கைவசம் வைத்திருந்தார்.

இப்படி சினிமா, சின்னத்திரை என பிசியாக இருந்து வந்த மாரிமுத்து கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அன்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். மாரிமுத்துவின் மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினர்கள் ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் நடிகர் மாரிமுத்து உயிரோடு இருக்கும் பொழுதே தன் மனைவியின் மீதுள்ள காதலை பல்வேறு பேட்டிகளில் வெளிப்படுத்தியிருந்தார். தற்பொழுது கணவனை இழந்த பின்னர் மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி ஒரு அதிரடி முடிவெடுத்துள்ளார். பொதுவாக கணவன் இறந்து விட்டால் பெண்கள் தாலியை கழட்டி விடுவார்கள் ஆனால் மாரிமுத்துவின் மனைவி தாலியை கடைசிவரை கழட்டவே கூடாது என்ற முடிவில் இருக்கிறாராம்.

தனது கணவனின் நினைவாக எப்பொழுதும் தாலியை அணிந்து இருக்க போவதாகவும் அது என்னிடம் இருந்தால் என் கணவரை என்னுடன் இருக்கும் ஓர் உணர்வு இருக்கும் என்பதனால் மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.