உலகில் ஜொலித்த பல பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர் அந்த வகையில் விவேக் மயில்சாமியை தொடங்கி பிரபல முன்னணி நடிகர் சரத்பாபு உயிரிழந்து உள்ளார். இது தென்னிந்திய சினிமாவையே தற்போது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சரத்பாபு தெலுங்கு சினிமாவில் முதலில் நடித்து அறிமுகமானார்.
தமிழில் பட்டின பிரவேசம் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் டாப் ஹீரோக்களான ரஜினி கமல் தொடங்கி பல இளம் ஹீரோகள் படங்களில் முக்கிய மற்றும் குணச்சத்திர கதாபாத்திரங்களில் நடித்து பேரையும் புகழையும் சம்பாதித்தார்.
இப்படி திரையுலகில் ஓடிய இவர் இதுவரை நானூருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் வயது முதிர்வின் காரணமாக சினிமாவில் நடிக்க முடியாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார் திடீரென அவருக்கு உடம்பில் பிரச்சினை ஏற்பட முதலில் பெங்களூருவில் சிகிச்சை அளித்து வந்தார் கடைசியாக ஹைதராபாத்தில் சிகிச்சை பலனின்றி இயற்கை எழுதினார்.
அவருடைய உடல் அங்கிருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து இறுதி சடங்குகள் நடைபெறும் என சொல்லப்படுகிறது. நடிகர் சரத்பாபுக்கு மொத்தம் இரண்டு மனைவிகள் முதல் மனைவி ரமா பிரபா , சரத் பாபுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர் இரண்டாவது மனைவி சினேகா நம்பியார் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சரத் பாபு தனது திரைபயணத்தில் இதுவரை எவ்வளவு சம்பாதித்து சொத்து சேர்த்துள்ளார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி இரண்டு கோடி அமெரிக்க டாலர்கள் வரும் என சொல்லப்படுகிறது. 400 படங்களுக்கு மேல் நடித்த சரத்பாபு இவ்வளவுதான் சம்பாதித்து உள்ளாரா என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.