தமிழ்சினிமாவில் நடிகராகவும், முதலமைச்சராகவும் தனது விடாமுயற்சியினால் இன்றளவும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியவர் தான் எம்ஜிஆர். நீ பிறந்தது ஒரு சம்பவமாக இருந்தாலும் உன்னுடைய இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கட்டும் என்ற வாக்கியத்திற்கு உரியவர் எம்ஜிஆர் என்று கூறலாம்.
ஏனென்றால் எம்ஜிஆர் செய்த சாதனைகளைப் பற்றி சொல இயலாது. அந்தளவிற்கு அடுக்கடுக்காக பல சாதனைகளைப் புரிந்தார். ஏழை மக்களின் வாழ்வில் வெளிச்சம் வருவதற்கு காரணம் இவர்தான். இவ்வாறு இவர் பல சாதனைகளைப் படைத்து அனைவருக்கும் முன்னோடியாக திகழ்ந்தார். இவர் முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகையான ஜெயலலிதா விஷயத்தில் மட்டும் மிகவும்ல் குழந்தைத்தனமாக நடந்து கொள்வார் என்று பிரபலம் ஒருவர் கூறி கொஞ்சம் அதிர்ச்சி அளித்துள்ளார்.
தற்பொழுது உள்ள பிரபல நடிகர் நடிகைகளை கூட தங்களது குழந்தைகளை கூட விடாமல் சினிமாவில் அறிமுகப்படுத்திய அவர்களுக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கிய தந்துவிடுவார்கள். ஆனால் அந்த காலகட்டத்தில் அப்படி இல்லை எம்ஜிஆர் தொடர்ந்து தனது விடாமுயற்சியால் தனது 40 வயதுக்குப் பிறகு தான் ஹீரோவாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பிறகு தான் அரசியலில் தனது முத்திரையை பதித்தார்.
சினிமாவில் ஜெயலலிதா உடன் எம்ஜிஆருக்கு ஏற்பட்ட நட்பினால் ஜெயலலிதாவையும் அரசியலில் அறிமுகம் செய்து அவர் ஆட்டத்தை ஆரம்பித்தார். அந்த வகையில் பல பத்திரிகைகள் கூட தமிழ்நாட்டில் ஒரு சாணக்கியர் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் எம்ஜிஆர், ஜெயலலிதா விஷயத்தில் மட்டும் மிகவும் குழந்தை தனமாக நடந்து கொள்வார் என்று பல பத்திரிகைகள் எழுதி வந்தது.
அந்த வகையில் ஜெயலலிதாவுடன் அதிக ரொமான்ஸ் வைத்ததால் ஒரு நடிகரை எம்ஜிஆருக்கு மிகவும் சுத்தமாக பிடிக்காமல் போய் விட்டதாம். அவர் வேறு யாரும் இல்லை தமிழ்சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் தான். ஜெய்சங்கர் மற்ற நடிகைகளுடன் நடிப்பதை விட ஜெயலலிதாவுடன் நடிக்கும்போது மட்டும் அதிகம் ரொமான்ஸ் செய்வாராம்.
எனவேதான் எம்ஜிஆருக்கு ஜெய்சங்கரை சுத்தமாகப் பிடிக்காமல் போய் விட்டதாம். எனவே எம்ஜிஆர் ஜெயலலிதா பார்த்துக் கொள்வதையே பெரிய வேலையாக வைத்திருந்தாராம்.இந்த தகவலை பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.