மரணப் படுக்கையில் தனது சகோதரியிடம் சத்தியம் வாங்கிய சரத் பாபு.! இவருக்கு இப்படி ஒரு ஆசையா.. கண் கலங்க வைக்கும் தகவல்

sarath-babu-1
sarath-babu-1

அண்மைக்காலமாக தொடர்ந்து ஏராளமான சினிமா பிரபலங்களின் மரணம் அதிகரித்து வருகிறது எனவே இதன் காரணமாக ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களும் பீதியிலிருந்து வருகிறார்கள். யார் எப்பொழுது எப்படி மரணம் அடைகிறார்கள் என்பதே தெரியவில்லை அந்த அளவிற்கு அடுத்தடுத்து ஏராளமான திரை பிரபலங்கள் மரணமடைந்து வருகிறார்கள்.

இது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது அந்த வகையில் சமீபத்தில் நடிகரும், இயக்குனருமான மனோபாலா உடல் நலக்குறைவால் உயிர் நீத்தார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது மேலும் அந்த மன வருத்தமே தீராத சூழ்நிலையில் தற்பொழுது சரத் பாபுவும் மரணமடைந்திருப்பது மேலும் மன கசப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலக்குறைவால் உயிர் நீத்த சரத்பாபுவிற்கு அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவருடைய கடைசி ஆசை பற்றி தெரியவந்துள்ளது அதாவது இவருடைய உடல் நிலை மிகவும் மோசமாக மாற ஆரம்பித்த காலகட்டத்தில் சரத் பாபு தனது சகோதரியிடம் ஒரு சத்தியத்தை வாங்கிக் கொண்டாராம் அதாவது தான் இறந்த பிறகு என்னுடைய இறுதி சடங்கு தமிழ்நாட்டில் தான் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டாராம்.

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த சரத் பாபு தன்னுடைய கடைசி காலத்தை ஹைதராபாத்தில் தான் வாழ்ந்தார். இப்படி இருக்கும் நிலமையில் தமிழ்நாட்டில் தனக்கான இறுதி சடங்கு காரியங்கள் நடைபெற வேண்டும் என கேட்டுக்கொண்டாராம் இவ்வாறு இந்த தகவல் தெரிந்தவுடன் பலரும் ஆச்சரியப்பட்டனர். மேலும் அதற்கு முக்கிய காரணம் ஒன்றும் உள்ளது.

அதாவது எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி பணம், புகழ என அனைத்தையும் கொடுத்தது தமிழ் மண்ணுதான் அதனால் எனக்கான இறுதிச்சடங்கு அந்த மண்ணில் தான் நடைபெற வேண்டும் என்று கூறியிருக்கிறார். தற்பொழுது இந்த விஷயத்தை அவருடைய சகோதரி தெரிவித்த நிலையில் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

அந்த வகையில் இவருடைய கடைசி ஆசையின் படி அவருடைய சொந்த ஊரிலிருந்து எடுத்துவரப்பட்டு அவருடைய உடல் சென்னையில் இருக்கும் அவருடைய சொந்த வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலியை நேரில் சென்று செலுத்தினார்.