தமிழ் சினிமாவில் பல தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களை எடுக்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது சன் பிக்சர் நிறுவனம் இவர்கள் பல கோடி செலவு செய்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை எடுத்து வருகிறார்கள் இந்த நிறுவனம் முதன்முதலில் எந்திரன் திரைப்படத்தின் மூலம் தான் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்தது.
அதன் பிறகு பல திரைப் படங்களை விநியோகம் செய்து வந்தது. இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் மீண்டும் 2018 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய சர்கார் திரைப்படத்தை மீண்டும் தயாரித்தது சன் பிச்சர் சர்கார் திரைப்படம் வெற்றி கொடுத்ததால் எப்படியாவது அடுத்தடுத்த திரைப்படங்களை தயாரித்து கல்லா கட்டிவிடலாம் என அந்நிறுவனம் நினைத்துக் கொண்டிருந்தது.
ஆனால் அவர்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. அந்த வகையில் ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் அண்ணாத்த இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது அதனால் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை சரி இந்த படம் போகட்டும் என அடுத்ததாக சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தயாரித்தார்கள். ஆனால் இந்தத் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை ரசிகர்களுக்கு கொடுக்க முடியவில்லை.
இதெல்லாம் போகட்டும் என மீண்டும் விஜயை வைத்து எப்படியாவது ஹிட் அடித்து போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டது இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக எந்த ஒரு பாதிப்பும் இல்லை என கூறி வருகிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள்.
இப்படி முன்னணி நடிகர்களான ரஜினி விஜய் சூர்யா ஆகியோர்களின் படங்களுக்கே இந்த ஒரு நிலைமை என்றால் மற்ற நடிகர்களின் படங்களை சொல்ல வேண்டுமென திரைப் பிரபலங்கள் கிசுகிசுத்து வருகிறார்கள்.