பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை லாஸ்லியா இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான்.
இவ்வாறு இவர் தற்போது பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் விஜய் டிவிதான் இந்த விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகப் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று கூட சொல்லலாம்.
அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர் மனதில் இடம்பிடித்த லாஸ்லியா தனக்கு என ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார். தற்போது இதனை பயன்படுத்தி பல்வேறு விளம்பர படங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றில் நடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் கூட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் உடன் இணைந்து சோப்பு விளம்பரம் ஒன்றில் கூட லாஸ்லியா நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு விளம்பர வாய்ப்பு வந்து கொண்டிருந்தாலும் இதுவரை முன்னணி நடிகர்களின் திரைப்பட வாய்ப்பு ஒன்று கூட கிடைக்கவில்லை.
அந்தவகையில் லாஸ்லியா தமிழில் ஹர்பஜன்சிங் நடிப்பில் வெளியான ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் பிக் பாஸ் தர்ஷன் நடிப்பில் வெளியான கூகுள் குட்டப்பன் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து வேறு ஏதேனும் திரைப்பட வாய்ப்பு இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.
தற்போது எப்படியாவது பட வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்ற காரணத்தினால் லாஸ்லியா அவ்வப்போது இணையத்தில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் வெகு காலமாக அடக்கமாக போட்டோ ஷூட் நடத்தி வந்த லாஸ்லியா தற்போது கவர்ச்சியிலும் தாராளம் காட்ட ஆரம்பித்து விட்டார்.