இலங்கை தொலைக்காட்சியில் செய்தியாளராக அறிமுகமாகி அதன் பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகைதான் லாஸ்லியா.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறந்த திறமையை வெளிக்காட்டியதன் மூலமாக இவருக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் திரண்டு போனதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் அவருக்காக ஆர்மி ஒன்றை உருவாக்கி கொண்டாடி வந்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் நமது லாஸ்லியா சக போட்டியாளர் கவின் உடன் காதலில் இருப்பதாக பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் அதனை வைரல் ஆக்கினார்கள் ஆனால் அந்த போட்டி முடிந்த பின்னர் கவின் மாற்றும் லாஸ்லியா ஆகிய இருவருமே பிஸியாகி விட்டார்கள் என்று சொல்லலாம்.
இந்நிலையில் நடிகை லாஸ்லியா தமிழ் சினிமாவில் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன் உடன் இணைந்து கூகுல் குட்டப்பன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க அண்மையில் நடிகை லாஸ்லியா ரசிகர் ஒருவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படத்தில் அவர்கள் இதய சிம்புலை தங்களது கைகளால் இணைத்து காட்டியது போல் புகைப்படம் வெளிவந்தது பலரையும் வியக்க தக்க வைத்தது.
இவ்வாறு வெளிவந்த அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த ஆண் நபர் யார் என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
