தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவர் ரஜினி போன்ற மிகப் பிரபலமான நடிகர்களை வைத்து மெகாஹிட் திரைப்படங்களை உருவாக்கியது மட்டுமில்லாமல் தற்போது திரைப்படம் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார் கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார் இந்த திரைப்படத்தில் லாஸ்லியா யோகி பாபு போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ஒரு சயின்ஸ் சம்பந்தப்பட்ட திரைப்படமாக அமைந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் யோகி பாபு ஆகியவர்கள் இருக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு மிக ஆறுதலாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம் அதுமட்டுமில்லாமல் பல்வேறு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் தர்ஷன் அவர்கள் இந்த திரைப்படத்தில் ஓரளவு மட்டுமே வரவேற்பை பெற்றுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் தாசன் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவருக்கும் காதல் காட்சிகள் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை என்று சொல்வது மட்டுமில்லாமல் இவர்கள் பார்ப்பதற்கு அண்ணன் தங்கை போல தான் இருக்கிறது காதலர்கள் போல இந்த திரைப்படத்தில் தெரியவில்லை என ரசிகர்கள் விமர்சனம் கூறிவருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய இருவர்களும் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் பொழுது சகித்துக்கொண்டு நடிப்பது போல தெரிகிறது. லாஸ்லியா இன்னும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி ஆக வேண்டும் அப்படி இல்லை என்றால் அவர் சினிமாவை விட்டு வெளியாகும் நிலைமை ஏற்படலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
குறிப்பிட்டுச் சொன்னால் இந்த திரைப்படம் பின்னடைவை சந்திப்பதற்கு இந்த இரண்டு பிக்பாஸ் ஜோடிகள் தான் காரணம் என திட்டவட்டமாக தெரிந்துள்ளது.