பட வாய்ப்புக்காக படு ஸ்லிம்மாக மாறிய லாஸ்லியா..! வெளிவந்த புகைப்படத்தால் மனம் நொந்துபோன ரசிகர்கள்..!

lossliya-1

இலங்கையில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அதன் பிறகு தன்னுடைய சிறந்த திறமை மூலமாக படிப்படியாக ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.

இவ்வாறு பிரபலமான நமது லாஸ்லியா பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையே திரட்டிவிட்டார்.

அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை லாஸ்லியா சக போட்டியாளரான கவின் உடன் இணைந்து இருப்பதை பார்த்து பலரும் அவர் மீது சந்தேகப்பட்டது மட்டுமல்லாமல் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது ஆனால் பிக் பாஸ் முடிவில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டது போல் அவர் அவரவர் வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த வகையில் நடிகை லாஸ்லியா மற்றும் கவின் ஆகிய இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் லாஸ்லியா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஃப்ரெண்ட்ஷிப் இத்திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்திருப்பார்.

மேலும் இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகை லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவ்வாறு உருவாகும் என்ற திரைப்படத்தில் நடிகை லாஸ்லியா உடன் பிரபல பிக்பாஸ் பிரபலம் தர்ஷனும் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுவாக சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை லாஸ்லியா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்தான் இந்நிலையில் அவர் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

lossliya-1
lossliya-1