தளபதி 65 விஜய்க்கு ஜோடியாக இந்த நடிகையா.! நடிகையின் பரபரப்பான பேட்டி.!

thalapathy
thalapathy

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக வலம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்பொழுது வசூல் மன்னனாக வலம் வருகிறார் இவர் நடிப்பில் வெளியாகி மாஸ்டர் படம் வேற லெவல் வெற்றியை கடந்து வந்தது. இந்த நிலையில்  மாஸ்டர் திரைப்படத்தின் பொழுது கோரணா பிரச்சினை இருந்து வந்தது அதனால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

50 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்துள்ளது. இந்த நிலையில் தளபதி 65 திரைப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது அதுமட்டுமில்லாமல் பல இயக்குனர்கள் பெயர்  தளபதி 65 அடி பட்டது.

அவர்களில் சிலரும் பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது. அப்படியிருக்கும் நிலையில் தளபதி 65 திரைப் படத்தை இயக்கம் வாய்ப்பை தட்டிப் தூக்கி சென்றார் இயக்குனர் நெல்சன்.  தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இவர் சமீபத்தில் ஒரு வீடியோ மூலம்  பூஜா ஹெக்டேதளபதி தனுஷ் சூர்யா குறித்து பேசியுள்ளார். தளபதி 65 திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் இதற்குமுன் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது டாக்டர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.

அதனால் முதலில் பூஜா மற்றும் ராஷ்மிகா மந்தனா இரு நடிகைகளுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது இந்த நிலையில் விஜய்க்கு ஜோடி போடும் நடிகையாக பூஜா ஹெக்டே நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன அதுமட்டுமில்லாமல் பூஜா ஹெக்டே சமீபத்தில் ஒரு பேட்டியில் தமிழில் நடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறேன் எனவும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார் இந்த படத்தின் மூலம் அது நடந்தால் மகிழ்ச்சி எனவும் அது கண்டிப்பாக நடக்கும் என எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

இந்த நிலையில் தளபதி 65 திரைப்படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க  இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.