அச்சச்சோ என்னால அங்க எல்லாம் வர முடியாது.! சமந்தாவால் புலம்பி தள்ளும் படக்குழு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.இவர் அதர்வா முரளி நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் சூர்யா, விஜய் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.பொதுவாக திருமணத்திற்குப் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் மொத்த மார்க்கெட்டும் வீணாகி விடும் என்பதற்காக பல நடிகைகள் இன்று வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் சமந்தா அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தற்போது தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சொல்லப்போனால் திருமணத்திற்குப் பிறகுதான் சமந்தாவின் மார்க்கெட் கூடி உள்ளது. அந்த வகையில் மலையாளம், தெலுங்கு, தமிழ் என்ற அனைத்து மொழிகளிலும் மாற்றி மாற்றி நடிப்பதற்கு வாய்ப்பு குவிந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இவர் தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சகுந்தலம் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் சேதுபதியின் திரைப்படமான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து இவர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருந்தார்.

அந்த வகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற இருந்தது ஆனால் தற்போது கொரொனா தாக்கம் அதிகளவில் பரவி வருவதால் சமந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டாராம் எனவே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.