சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் அதன்மூலம் இவர் மக்களுக்கு தனது முகத்தை பதிய வைத்துக் கொண்டார்.
மேலும் இவர் ஹவுஸ் ஓனர் என சமூக விழிப்புணர்வு கொண்ட படங்களை எடுத்து நல்ல வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 2008ல் பிரிவோம் சந்திப்போம் படத்தில் சினேகாவுக்கு அம்மாவாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் இவர்.
மேலும் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார் தற்போது நேர்கொண்டபார்வை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் பெண்களின் முன்னேற்றத்தை விரும்பும் இவர் 15 வருடங்களுக்கு முன் சினிமாவிற்குள் வந்தபோது படத்திற்காக எடுத்துக்கொண்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படி இருக்கிறார் என ஆச்சரியத்துடன் இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.