தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்தவர் சிவகார்த்திகேயன், இவர் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் குடும்ப பாங்கான திரைப்படம்தான் அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து விட்டார், இவர் முதன்முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் அதன் பிறகு மெல்ல மெல்ல வெள்ளித்திரைக்கு முன்னேறி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து விட்டார்.
இவர் முதன்முதலில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகிய மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார், ஆனால் இவர் இதற்கு முன் ஒரு திரைப்படத்தில் அறிமுகமாக இருந்தது தற்போது வெளியாகியுள்ளது, அதே போல் லட்சுமி ராமகிருஷ்ணன் சர்ச்சைகளை கிளப்பும் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர். ஆம் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் குறள் 786 என்னும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாக இருந்தவர்தான் சிவகார்த்திகேயன், அந்த திரைப்படத்தின் பணிக்காக இரண்டு வருடம் லட்சுமி ராமகிருஷ்ணன் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார், ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவர் கூறியதாவது சிவகார்த்திகேயன் தன்னை யாரென்றே தெரியாது என கூறியதாக அவர் மீது புகார் எழுப்பியுள்ளார், இதற்குமுன் சிவகார்த்திகேயன் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இருவருக்கும் இடையே நேரடியாக பிரச்சினை வந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான், ஆனால் அப்போது சிவகார்த்திகேயன் அமைதி காத்ததால் அந்த விஷயம் பெரிதாக பேசப்படவில்லை.
இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் அவருக்கு முதல் வாய்ப்புக் கொடுக்க இருந்த என்னை யாரென்று தெரியாது எனக் கூறியது எனக்கு வருத்தமாக இருக்கிறது எனவும் சோகத்துடன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் வளர்ந்ததும் இப்படி செய்துவிட்டாரா அல்லது லட்சுமி ராமகிருஷ்ணன் வேண்டுமென்றே புகார் கூறுகிறாரா என சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.