பல வருடம் கழித்து ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமி மேனன்.! ஹீரோ இவர் தானா.

lakshmi menon
lakshmi menon

கும்கி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இவர் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அதன் பின்பு தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் பல முன்னணி நடிகைகளை திரும்பிப்பார்க்க வைத்தார் லட்சுமிமேனன் அந்தவகையில் இவர் நடித்த படங்களான நான் சிகப்பு மனிதன், சுந்தரபாண்டியன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் போன்ற படங்கள் மேலும் இவருக்கு நற்பெயரையும் வாங்கித் தந்தனர்.

இப்படி சினிமாவுலகில் சிறப்பான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவருக்கு இன்ப செய்தி ஒன்று வந்தது  தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது இப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தாலும் இவரது நடிப்பு பெரும் அளவில் பேசப்பட்ட தோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் அவர் பிரபலமடைந்தார்.

மேலும் தொடர்ந்து அதிகப்படியான வாய்ப்புகளை கைப்பற்றினார் இப்படி சினிமாவுலகில் சிறப்பாக வந்து கொண்டிருந்த நடித்து வந்தாலும் ஒரு சில படங்களில் கமிட்டாகி பின் வாய்ப்புகள் பறிபோனது அப்செட் ஆகிய லட்சுமிமேனன் திடீரென தனது படிப்பை மேற்கொள்ளப் போவதாக கூறிய சினிமா உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் சில ஆண்டுகளாக மேற்படிப்பை படித்துக் கொண்டிருந்த இவர் தற்போது மீண்டும் தமிழ் சினிமா உலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

அந்த வகையில் இவர் வசந்தபாலனின் உதவி இயக்குனரான ராஜசேகர பாண்டியன் இயக்கும் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் மேலும் இப்படத்தில் ஹீரோவாக ஆதி அவர்கள் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு என்னவோ சமீபகாலமாக அவர் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருபக்கம் திரட்டி வருகிறார்.