2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர், ஆக்சன், காமெடி கலந்த ஒரு படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர், நயன்தாரா, விஜயகுமார் என பல திரைப்படங்கள் நடித்திருந்தனர் இந்த படம் வெளிவந்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற பெயரையும் பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி இரண்டாவது பாகம் உருவாக வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் ரஜினிக்கு இதில் உடன்பாடு இல்லை அதனால் இரண்டாவது பாகம் உருவாகவில்லை நீண்ட இடைவெளிக்கு பிறகு பி. வாசு சந்திரமுகி கதையை உருவாக்கி மீண்டும் ரஜினியிடம் கூறியிருக்கிறார் அப்பொழுதும் அவர் நான் நடிக்க மாட்டேன் என தெள்ளத் தெளிவாக சொன்னதால் அவருடைய சிஷ்யன்ஸிடம் கதை சொல்லி ஓகே வாங்கினார். அதனால் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தின் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.
படத்தில் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார், வடிவேலு, லட்சுமி மேனன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். சந்திரமுகி 2 படத்தில் யார் எந்த கேரக்டரில் நடித்தாலும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளத்தான் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டினர் . அதற்கு தற்பொழுது விடையும் கிடைத்துள்ளது.
சந்திரமுகி இரண்டாவது பாகத்தில் சந்திரமுகியாக நடிப்பது வேறு யாரும் அல்ல.. லட்சுமிமேனன் என கூறப்படுகிறது அவர் இந்த படத்தில் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணாக வருகிறாராம் அவரது காட்சிகள் எல்லாம் பிளாஸ்பேக்கில் தான் வரும் என கூறப்படுகிறது. லட்சுமிமேனன் முதல் முறையாக இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.