தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் லட்சுமிமேனன் இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் தமிழ் திரையுலகில் முதன் முதலாக சசிகுமார் கதாநாயகனாக நடித்த சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த கும்கி திரைப்படத்தில் நடித்திருந்தார் விக்ரம் பிரபுவிற்கு அறிமுகமாகும் திரைப்படம் என்பதால் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார்.
இப்படி லட்சுமி மேனனுக்கு அடுத்தடுத்த ஜாக்பாட் அடித்த வந்ததால் அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகிய பாண்டியநாடு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய ஜிகிர்தண்டா, கார்த்திக் நாயகனாக நடித்த கொம்பன், அஜித் நடிப்பில் வெளியாகிய வேதாளம் என பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் லட்சுமி மேனன் சில வருடமாக நடிக்காமல் இருந்த நிலையில் தற்பொழுது ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த புதிய திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டீஸர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது இந்த படத்தை கே எஸ் ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் எழுதி இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் லட்சுமிமேனன் கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படம் மனசிதைவு நோயை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது படத்தை வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்கில் ஒளிப்பரப்ப படக்குழு முடிவு செய்துள்ளது.
இதோ அந்த ட்ரெய்லர்.