தமிழ் சினிமாவில் வருடத்தில் பல புதுமுக நடிகைகள் நடிக்க வருகிறார்கள் அவர்கள் ஒரு சில திரைப்படங்கள் நடித்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்துவிடுகின்றன அதேபோல் நடிக்க வந்த ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் நடித்து விட்டு பின்பு காணமல் போன நடிகைகளும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை லட்சுமிமேனன் முதலில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் பின்பு இடையில் எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வந்தார் அதற்கு காரணம் உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என பலரும் குற்றச்சாட்டை கூறினார்கள். பின்பு தனது உடல் எடையை குறைத்து அதிரடியாக மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு களமிறங்கினார்.
லட்சுமி மேனன் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். தான் நடித்த முதல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததால் அடுத்ததாக கும்கி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கும்கி படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அது மட்டுமில்லாமல் கும்கி படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது. மேலும் நித்யா மேனன் குட்டிப்புலி பாண்டியநாடு நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, அவதாரம், கொம்பன், வேதாளம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் தொடர்ந்து நடித்து வந்த இவர் உடல் எடை அதிகரித்ததால் இவருக்கு பட வாய்ப்பு குறையத் தொடங்கியது.
அதனால் தனது படிப்பில் அதிக ஆர்வம் காட்டி வந்தார் இந்தநிலையில் தற்போது இவர் மீண்டும் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் இந்த நிலையை கௌதம் கார்த்திக் நடித்துவரும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் ஒரு திரைப்படத்திலும் கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் கடைசியாக நடித்த திரைப்படம் புலிகுத்தி பாண்டி இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதிலும் மக்கள் மனதிலும் ஸ்கோர் செய்துவிட்டார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவார்.
ஆனால் சமீபத்தில் தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் தினத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களை விட உங்கள் அம்மா மிகவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து கருத்து தெரிவித்துள்ளார்கள். மேலும் சில ரசிகர்களை இது உங்க அம்மா தானா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.