தமிழ் சினிமாவில் கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு அந்த வகையில் அசின் முதல் தற்பொழுது உள்ள நடிகைகள் வரை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் சில திரைப்படங்களில் நடித்து விட்டு காணாமல் போய்விடுகிறார்கள்.
அந்த வகையில் நடிகை லட்சுமி மேனன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன்முதலில் மலையாளத் திரைப்படத்தில் தான் நடித்து வந்தார் பின்பு 2012ம் ஆண்டு சுந்தரபாண்டியன் என்ற சசிகுமார் திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விகடன் விருது கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து அடுத்ததாக கும்கி திரைப்படத்தில் நடித்தார், இந்த திரைப்படமும் இவரை முன்னணி நடிகை ரேஞ்சுக்கு உயர்த்தியது, இதனைத்தொடர்ந்து குட்டிப்புலி, மஞ்சப்பை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் ஜிகர்தண்டா, சிப்பாய், கொம்பன், றெக்கை ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார். ஒரு காலகட்டத்தில் இவர் உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
பின்பு அஜித்தின் வேதாளம் திரைப்படத்தில் அஜித்திருக்கு தங்கையாக நடித்திருந்தார் அதன்பின்பு இவருக்கு வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தங்கை கதாபாத்திரம் தான் அதனால் படிப்பை காரணம் காட்டி சினிமாவில் இருந்து விலகினார். கடைசியாக நடித்த திரைப்படம் ஜில் ஜங் ஜக் இந்த திரைப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
மேலும் முத்தையா இயக்கத்தில் 4 வருடத்திற்கும் பின் மீண்டும் தமிழ் சினிமாவில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க இருந்தார், இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் ஹீரோயின் கான்செப்ட் படத்திலும் லட்சுமி மேனன் கமிட்டாகியுள்ளார், கொரோனா பிரச்சினை முடிவடைந்த பிறகு இந்த திரைப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பதற்கு வெறித்தனமாக தயாராகி வருகிறார் லட்சுமிமேனன் அதனால் முதுகில் மிகப்பெரிய தாமரைப்பூ கொண்ட டாட்டு குத்திக்கண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.