பொதுவாக ஒரு சில நடிகைகள் முதல் திரைப்படத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து விடுவார்கள் ஆனால் அதன் பிறகு பெரிதாக அவர்களுக்கு பட வாய்ப்பு அமைவதில்லை இந்த லிஸ்டில் பல நடிகைகள் தற்போது இணைந்துள்ளார்கள். இந்த நிலையில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் பேரும் புகழையும் பெற்றவர் நடிகை லட்சுமிமேனன்.
கும்கி திரைப்படத்தை பிரபு சாலமன் என்பவர் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமாகியவர் நடிகை லட்சுமிமேனன் 16 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த நடிகை ஆவார் இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நடிகை ஆக அறிமுகமானார். பொதுவாக மலையாளத்தில் உயர்ந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் லட்சுமி மேனன் என்பவரும் ஒருவர் கும்கி திரைப்படத்தை தொடர்ந்து நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் மிருதன், றெக்க, வேதாளம் என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படி தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்பு அதிகரிக்கும் பொழுது திடீரென உடல் எடையை ஏற்றி தனக்கு வந்த வாய்ப்பு அனைத்தையும் இழந்துவிட்டார்.
27 வயதாகும் லட்சுமிமேனன் தற்பொழுது சந்திரமுகி இரண்டாவது பாகத்திலும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் முகம் வீங்கிய நிலையில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் லட்சுமிமேனன் தான் இப்படி இருப்பது என பலரும் கமென்ட் செய்து வருகிறார்கள்.