lakshmi menon : பொதுவாக கேரளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமா மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறது அந்த வகையில் கேரளாவில் இருந்து வரும் நடிகைகள் முன்னணி நடிகைகளாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் சினிமாவில்.
அந்த லிஸ்டில் இணைந்தவர் தான் லட்சுமிமேனன் இவர் ஆரம்பத்தில் துணை நடிகையாக நடித்து வந்தார் இதனைத் தொடர்ந்து இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது உடனே கும்கி திரைப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மேக்கப் இல்லாமல் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் இதனை தொடர்ந்து சினிமா பக்கம் சிறிது காலம் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.
பிறகு மீண்டும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் சூட்டிங் போவது நடந்த சில சம்பவங்களை அவர் பகிர்ந்து உள்ளார். அதாவது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சில காட்சிகள் அவர் சொன்னது போல் சரியாக நடிக்கவில்லை அதனால் இயக்குனர் பி வாசு அவர்கள் பொது இடத்தில் திட்டி உள்ளார்.
இயக்குனர் பி வாசு யார் இருந்தாலும் எந்த இடமாக இருந்தாலும் பார்க்க மாட்டார் உடனே திட்டி விடுவார் அப்படித்தான் படபிடிப்பு தளத்தில் லட்சுமிமேனன் அவர்களை மிகவும் திட்டியுள்ளார் அப்பொழுது அவருக்கு மிகவும் சங்கடமாக இருந்ததாகவும் மனநிலை சரியாக இல்லை எனவும் கூறினார் அதுமட்டுமில்லாமல் பி வாசு அவர்களிடம் நேரடியாக சென்று நான் சரியாக நடிக்க வில்லை என்றால் என்னை தயவு செய்து தனியாக அழைத்து சென்று திட்டுங்கள் எல்லாரும் முன்னாடியும் திட்டாதீர்கள் என கூறினாராம்.
மேலும் பலர் முன்பு என்னை திட்டும் பொழுது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது எனவும் தனியாக அழைத்துக் கொண்டு திட்டுங்கள் என அழுதபடியே கதறி கண்ணீர் விட்டு கூறியுள்ளார் இதனை அடுத்து எந்த பிரச்சினையாக இருந்தாலும் இயக்குனர் என்னை தனியாக அழைத்து அந்த காட்சியை தெளிவாக விளக்கிக் கூறுவார். அது மட்டுமில்லாமல் எப்படி நடிக்கணும் எப்படி நடிக்க கூடாது என்பதையும் விரிவாக விளக்கி சொல்லிக் கொடுப்பார் அவ்வளவு பொறுப்பான இயக்குனர் பி வாசு என அந்த பேட்டியில் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் பி வாசு இயக்குனர் மட்டுமல்லாமல் ஒரு நல்ல ஆசிரியர் எனவும் கூறியுள்ளார்.