தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் லட்சுமிமேனன் இவர் தமிழில் முதன்முதலாக சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது.
சுந்தரபாண்டியன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கும்கி என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
கும்கி திரைப்படம் வெற்றி பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை அந்தளவு மிக பெரிய வெற்றி அடைந்தது, கும்கி திரைப்படத்தை தொடர்ந்து லக்ஷ்மி மேனன் குட்டிப்புலி மஞ்சப்பை பாண்டியநாடு நான் சிகப்பு மனிதன் ஜிகர்தண்டா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் கொஞ்சம் உடல் எடை அதிகரித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. கைதான பட வாய்ப்பு கிடைக்காததால் லட்சுமி மேனன் தனது படிப்பு விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தற்பொழுது படிப்பு முடிந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார், அதற்காக சமீபத்தில் நடிகை லட்சுமிமேனன் சமூக வளைதளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டார்.
அந்த புகைப்படத்தில் லட்சுமிமேனன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருந்தார். அடடா நம்ம லட்சுமி மேனனா என பலரும் வியந்தார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை லட்சுமிமேனன் கண்ணாடி முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் புகைப்படத்தில் லட்சுமிமேனன் மேக்கப் இல்லாமல் சாதாரணமாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நம்ம லட்சுமிமேனன் ஆய்வு என வியக்கிறார்கள்.