தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அந்த வகையில் இயக்குனர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் என்ற திரைப்படம் கூட இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் தற்போது நாய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படத்தை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் கேஜிபி என்ற திரைப்படத்தில் லட்சுமிமேனன் நடித்து வருகிறார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் அந்நியன் திரைப்படத்தில் விக்ரம் எப்படி அம்பி ரெமோ அந்நியன் என மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதேபோல இந்த திரைப்படத்தில் லட்சுமிமேனன் மூன்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை லட்சுமி மேனன் மனசிக்கல் உடைய பெண்ணாகவும் கற்பனையில் ஒரு பெண்ணாகவும் நிஜத்தில் ஒரு பெண்ணாகவும் மாறுபட்ட கருத்து கொண்டவளாக ஒரு மன நோயால் பாதிக்கப்பட்ட பெண் போல லட்சுமிமேனன் நடித்துள்ளார்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது சமீபத்தில் வெளியாகி உள்ளது இந்த போஸ்டரை விஜய் சேதுபதி, ஆர்யா, விமல், ஐஸ்வர்யா, ராஜேஷ் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து வெளியிட்டுள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் லட்சுமிமேனன் தான் வெகு நாள் கழித்து மறுபடியும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பதன் காரணமாக தான் இப்படி மாறுபட்ட கதையம்சம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் ஆனால் இந்தத் திரைப்படம் இவருக்கு கைகொடுக்குமா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.