பொதுவாக நடிகைகளை பொருத்தவரை குறிப்பிட்ட காலம் வரை மட்டும்தான் அவர்களுக்கு தொடர்ந்து திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் இவர்களுடைய இளமை காலம் வரை தொடர்ந்து கதாநாயகியாக சினிமாவில் கலக்கி வருவார்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவர்களுக்கு வயதான காரணத்தினால் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறையும் இதன் காரணத்தினால் சினிமாவை விட்டு வெளியேறும் நடிகைகள் பலர் உள்ளார்கள்.
அந்த வகையில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு வெளியேறிய நடிகை தான் லைலா. இவருடைய கண்ணக்குழி அழகினால் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக கலக்கி வந்தார்.
அந்த வகையில் தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த பிதாமகன், தீனா, தில், நந்தா போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றினை பெற்று தந்தது. இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து இவர் திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை பக்கமே வராமல் இருந்து வந்தார்.
மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வந்த இவர் திரைப்படங்களில் நடிப்பார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை லைலா கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கடந்த 2006ஆம் ஆண்டு மெஹ்டி என்பவரை திருமணம் செய்து கொண்ட லைலாவிற்கு தற்பொழுது இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் தற்பொழுது நடிகைகள் தன்னுடைய கணவர் மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட அது வைரலாகி வருகிறது இதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.