பலூன் வெடித்ததால் படப்பிடிப்பு தளத்திலிருந்து தெறித்து ஓடிய லைலா – வெளிவரும் ரகசியம்.!

laila
laila

நடிகை லைலா தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். குறிப்பாக தமிழில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.  லைலா அஜித்துடன் தீனா, சூர்யாவுடன் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்தவர்.

தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நடிகை லைலா ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் இப்பொழுது இவர் சினிமா உலகில் பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்த சில சுவாரஸ்யமான தகவல்களை..

இப்பொழுது பேட்டிகளில் சொல்லி வருகிறார் அப்படி சினிமா உலகில் தனக்கு நடந்த சம்பவத்தை பகிர்ந்து உள்ளார் நடிகை லைலா. ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகை லைலா ஒரு காட்சியில் கேக் வெட்டி கொண்டாடும் படியான ஒரு காட்சி இடம்பெற்றது அதற்காக நடிகை லைலா.

தயாராகி இருந்தபோது பக்கத்தில் இருந்த ஹீலியம் பலூன் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்ததில் அங்கு சுற்றி இருந்தவர்கள் பயந்தனர் நான் மிகவும் பயந்து போய் விட்டேன் அதன்பிறகு பயத்தில் நான் வீட்டிற்கே சென்று விட்டேன் சூட்டிங் என்று கூட பார்க்காமல் என கூறினார்.

பின் படக்குழு வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து பிறகு ஒருவழியாக அந்த தெலுங்கு படத்தில் நடித்து வந்தாராம் இப்பொழுது கூட அந்த ஹீலியம் பலூன் வெடித்ததை நினைத்தாலே அவருக்கு பயம் வந்து விடுமாம்