தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் அவர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை லைலா. இவர் சூர்யா விக்ரம் இணைந்து நடித்திருந்த பிதாமகன் திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். இதில் லைலா மிகவும் குறும்புக்கார பெண்ணாகவும், அதிக கோபம் உடையவராகவும் நடித்திருந்தார். இந்நிலையில் இப்படம் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது.
இதனைப் பார்த்த லைலா தனது பழைய நினைவுகள் மலரும் வகையில் தற்போது தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். படத்தின் சூர்யா பொருட்களை மிகவும் குறைந்த விலைக்கு ரயிலின் ஏலம் விடுவார் இந்த காமெடியை லைலா வெளியிட்டு அதில் இப்படப்பிடிப்பு தேனி அருகே உள்ள இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டு இருக்கும்போது எடுக்கப்பட்டது என்றும்,
இப்படம் கிட்டத்தட்ட 10 நாட்கள் எடுக்கப்பட்டது நான் கலந்துகொண்ட அந்த பத்து நாட்களும் என்னால் மறக்க முடியாது. அந்தவகையில் இந்த ஷூட்டிங் நடக்கும் பொழுது அதிகம் காமெடியாக இருந்தது என்றும், தேனி பகுதி எனக்கு மிகவும் பிடித்த இடம் என்றும் கூறியுள்ளார்.
அந்த ட்ரைனில் நடந்த காமெடி வீடியோவை தற்போது இணையதளத்தில் லைலா பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.