நடிகை லைலா ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து ஓடிக்கொண்டிருந்த இவர் 1999ஆம் ஆண்டு கள்ளழகர் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழில் தனது பயணத்தை தொடர்ந்தார். அதன்பின் இவர் தமிழ் சினிமாவில் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாக மாறினார்.
அந்த வகையில் முதல்வன், உன்னை நினைத்து, காமராசு, நந்தா, பிதாமகன், அள்ளித்தந்த வானம், மௌனம் பேசியதே, பரமசிவன், ஜெய் சூர்யா, தில், தீனா என தொடர்ந்து வெற்றியை நோக்கிய ஓடிக்கொண்டிருந்த இவர் ஈரான் நாட்டில் தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை 2006 ஆம் ஆண்டு காதலித்த பின் கல்யாணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது இரு பிள்ளைகள் உள்ளனர்.
அதன் பின் நடிகை லைலா சினிமா உலகில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து வந்தார். இருப்பினும் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இப்படி இருக்கின்ற நிலையில் 41 வயதாகும் நடிகை லைலா திடீரென மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.
16 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் சர்தார் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இந்த தகவல் வைரலாகி வருகிறது.
இவர் இந்தப் படத்தில் நிச்சயம் நடிகை லைலா நடிக்கும் பட்சத்தில் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் படம் சூப்பர் ஹிட்டாகும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.