தமிழ் சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை லைலா. இவர் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் வெகுவிரைவிலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் அதுமட்டுமில்லாமல் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்மூலம் இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகரின் படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இவர் தமிழ் சினிமாவில் கள்ளழகர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் அடுத்து அவர் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் ஹிட்டடித்த அந்த வகையில் இவர் நடித்த தீனா,தில், நந்தா, மௌனம் பேசியதே, உன்னைநினைத்து போன்ற படங்கள் இவருக்கு அடுத்த லெவலுக்கு அழைத்துச் சென்றது.
அதன்பிறகு இவர் மீண்டும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அந்த வகையில் இவர் பிதாமகன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மேலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பல விருதுகளை தட்டிச் சென்றார் இப்படி திரை உலக வாழ்க்கையில் மிக சிறப்பாக வந்து கொண்டிருந்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு மெஹதீன் என்பவரை திருமணம் செய்துகொண்டு இல்லத்தரசியாக மாறினார் தற்போது இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சினிமா உலகில் தற்போது அடியெடுத்து வைக்க யுள்ளார்.தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் இவர் கமிட்டாகியுள்ளார் இப்படத்தில் ஹீரோவாக விஷால் அவர்கள் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவலாக தெரியவருகிறது.மேலும் இவர் இப்படத்தில் பேய்யாக நடிக்கயுள்ளார் என கூறப்படுகிறது