மலையாள சினிமாவில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் பக்கம் வந்தவர் நடிகை நயன்தாரா எடுத்தவுடனேயே தமிழில் டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வெற்றி கண்டதால் அந்த இடத்தை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து டாப் நடிகர்களுடன் கை கொடுத்து நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.
இப்போது தென்னிந்திய சினிமா உலகில் நம்பர்-1 நடிகையாகவும் நயன்தாரா வலம் வருகிறார் தமிழ் சினிமாவில் இதுவரை உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் மட்டுமே நடித்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபக்கம் இப்படி ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் நடிகை நயன்தாரா சோலோ படங்களிலும் நடித்து அசத்துகிறார். இப்பொழுது கூட நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு சோலோ படங்களில் நடிக்க ரெடியாக உள்ளார்.
அந்த வகையில் இவரது கையில் கனெக்ட், ஆக்சிஜன் ஆகிய திரைப்படங்கள் கைவசம் இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நயன்தாரா இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பெண்களை மையப்படுத்தி உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் சம்மதம் தெரிவித்தார் ஆனால் இப்பொழுது இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு அவர் அதிகபட்சமாக சுமார் 10 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுவரை 5 கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில் திடீரென சம்பளத்தை உயர்த்தி உள்ளது தற்போது தயாரிப்பாளரை சற்று ஆச்சரியப்படுத்தி உள்ளது.