15 வருடங்களாக ஒரே ஒரு முன்னணி நடிகருடன் மட்டும் ஜோடி சேராமல் வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – அதுவும் தமிழ் நடிகர்.?

nayanthara
nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மலையாள சினிமாவில் நடித்து பின் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா பக்கம் வந்தார் முதலில் சரத்குமாருடன் நேந்து ஐயா என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு சூப்பர் ஹிட் அடிக்க அதன் பிறகு நடிகை நயன்தாரா டாப் நடிகர்களுடன் மட்டுமே கைகோர்த்து நடித்தார்.

அது இப்போது வரையிலும் பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ரஜினி, சரத்குமார் போன்றவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இப்போதுகூட டாப் நடிகரான விஜய் சேதுபதியுடன் கைகோர்த்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து சோலோ படங்களான   காட்பாதர், கனெக்ட் மற்றும் பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதனால் நடிகை நயன்தாராவின் சினிமா பயணம் தொடர்ந்துகொண்டே போகிறது டாப் நடிகர்களுடன் படங்களில் நடிப்பதால் தனது சம்பளத்தையும் அதிகப்படியாக உயர்த்துகிறார் மேலும் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இவர் இணைந்து படங்களைத் தயாரிக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி ஓடி ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் ரசிகர்கள் தனக்கு வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டது படங்களில் சற்று கிளாமராக நடிப்பது  நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை எடுத்து வருகிறார்

இந்த நிலையில் நடிகை நயன்தாரா  பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டு வந்தாலும் இதுவரை ஒரே ஒரு முன்னணி நடிகருடன் மட்டும் ஜோடி சேராமல் இருக்கிறாராம் 15 வருடங்களை கடந்து முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா இதுவரை மட்டும் அந்த நடிகர்களுடன் இணைந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நடிகர் வேறு யாரும் அல்ல கமல் தான்.