மாஸ்க் போட்டுக்கிட்டு ரோட்டு ஓரக்கடையில் பேரம் பேசி பொருளை வாங்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – ரசிகர்களை கவர்ந்த வீடியோ இதோ.

nayanthara
nayanthara

தென்னிந்திய திரை உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார் .இவர் இதுவரை அஜித், விஜய், ரஜினி போன்ற டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டே இருக்கிறார் .

மேலும் சில படங்களிலும் சிறப்பாக நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருவதால் நயன்தாராவுக்கு என இந்திய அளவில் பெரும் ரசிகர்கள் இருக்கின்றனர். நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படமான நெற்றிக்கண் திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் மாறுதலாக ஓடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதைத்தொடர்ந்து தற்போது தனது காதலன் விக்னேஷ் சிவன்  இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் இவர் மலையாள டாப் இயக்குனரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ஓல்ட் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் இப்படி அடுத்தடுத்த சூப்பர் இயக்குனர் நடிகர் என தேர்ந்தெடுத்து நடித்து அசத்துகிறார். மேலும் தனது காதலுடன் அவ்வபோது ஊர் சுற்றுவதும் வழக்கமாக வைத்துள்ளதால் மக்கள் மத்தியில் எப்பொழுதும் பேசும் நபராக இருக்கிறார்.

மேலும் பிரபலங்கள் அவ்வப்போதும் மறைமுகமாக வெளியே செல்வது உண்டு. அதுபோல தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் வெள்ளை சுடிதாரில் ஐந்து மாஸ்க் போட்டு கொண்டு ரோட்டோரத்தில் இவர் ஒரு கடையில் பேரம் பேசிய வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.