விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டபிறகு கோடிகளை வாரி இறைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா .? எதனால் தெரியுமா..

nayanthara

லேடி சூப்பர்ஸ்டார் – நயன்தாரா விக்னேஷ் சிவனை ஆறு வருடங்களுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில் நேற்று ஒரு வழியாக உறவினர், நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். விக்னேஷ் சிவன், நயன்தாரா கழுத்தில் தாலி கட்டிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது.

மேலும் இவர்கள் கல்யாணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தாலி எடுத்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது கல்யாணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் தொடங்கிய சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வசதியாக இந்த நிகழ்ச்சியை வேற லெவல் எடுத்துச் சென்றது.

இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் விக்கி நயன்தாரா கல்யாணத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் என தொடங்கி ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்து உள்ளனர். திருமணம் முடிந்த பிறகு உடனடியாக திருப்பதி சென்று அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய போயுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை இப்படிப் போய்க்கொண்டிருக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டதற்காக தற்பொழுது விக்னேஷ் சிவன்னுக்கு 20 கோடி மதிப்புள்ள ஒரு பங்களாவை எழுதி கொடுத்துள்ளார்.

vignesh shivan
vignesh shivan

மேலும் 30 சவரன் நகையை வினேஷ் சிவன் தங்கைக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது இது வரதட்சனை அல்லது விக்னேஷ் சிவன் மேல் வைத்திருந்த பாசம் என தெரியவில்லை  கோடிக்கணக்கில் அள்ளி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால்  பிரபல பத்திரிகைகளில் இருந்து பகிரப்பட்டது.