படக்குழுவினருக்கு புதிய கண்டிஷன் போடும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – இதுக்கு நீ நடிக்காமலே இருக்கலாம் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்கள் மற்றும் சோலோ படங்களை கைப்பற்றி நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தியுள்ளார். மேலும் தமிழில் உள்ள நடிகைகளில் நயன்தாரா  நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி சினிமாவே கதி பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வந்த நயன்தாரா ஒருகட்டத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட இருவரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் சினிமா பிரபலங்கள் நண்பர்கள் உறவினர்கள் என சிலர் மத்தியில் விமர்சையாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு தற்போது தாய்லாந்துக்கு இருவரும் ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றன. திருமணத்திற்கு முன்பு நயன்தாரா படங்களில்  எவ்வளவு கடினமான காட்சியாக இருந்தாலும் சிறப்பாக நடித்து அசத்தி கொடுத்து வந்தார்.

ஆனால் கல்யாணத்திற்கு அவர் நடிக்கும் படங்களில் பல கண்டிஷன்கள் இருக்கும் என்பது தெரிய வருகிறது. மேலும் சமீபத்தில் கூட இனிமேல் நடிகர்களுடன் நெருங்கி நடிக்கும் காட்சி முத்தகாட்சி போன்றவற்றில் நயன்தாரா நடிக்க மாட்டார் என்பது போல தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் காண்டான கோலிவுட் வட்டாரங்கள் பலரும் நீ நடிக்கவே தேவையில்லை என்பது போல் விமர்சித்து வருகின்றனர்

ஏனென்றால் சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஓ 2  படம் தோல்வி அடைந்தது அதற்கு காரணம் நயன்தாரா அவர் இஷ்டத்திற்கு நடித்ததுதான் என கூறப்படுகின்றன.  இந்த நிலையில் இனிமேல் நயன்தாரா நடிக்கும் படங்களில் பல கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடிக்காமலே இருக்கலாம் என பலரும் விமர்சித்து வருவது தற்போது வைரலாகி வருகிறது.