Nayanathara : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் இருக்கின்றன. குடும்பத்துடன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்தாலும் பட வாய்ப்புகளை அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி பெற்றது. அடுத்து வெளியான இறைவன் திரைப்படம் வெற்றி நடை கண்டு வருகிறது. தற்போது நயன்தாரா கைவசம் நயன்தாரா 75, டெஸ்ட் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் இப்படிப்பட்ட நயன்தாரா ஒரே ஒரு நடிகரை மட்டும் 20 வருடங்களாக ஒதுங்கி வைத்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
அந்த நடிகர் வேறு யாரும் அல்ல நடிப்பிற்கு பெயர்போன உலகநாயகன் கமலஹாசன் தான்.. இவர் உடன் நடிக்கும் வாய்ப்புகள் வந்தாலும் நயன்தாரா அதையெல்லாம் தவற விட்டிருக்கிறார் காரணம் என்னவென்று பார்த்தால்.. கமல் படத்தில் ஒரு சீன்னாவது லிப்லாக் இருந்துவிடும் அதனாலையே நயன்தாரா கமலுடன் இணைந்து நடிக்கவில்லை.. ஏற்கனவே வல்லவன் படத்தின் போது சிம்புவுடன் நயன்தாரா காதலில் விழுந்த சமயத்தில் இருவரும் லிப்லாக் அடித்த சீன் இன்றுவரை பேசப்பட்டு வருகிறது.
அதன் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரல் ஆகின. அதேபோல் கமல் படத்தில் நடித்து இன்னமும் தனது பெயரை டேமேஜ் செய்து கொள்ள விரும்பாததால் கமலுடன் இன்று வரை நடிக்காமல் இருந்து வருகிறார். ஷாருக்கானின் ஜவான் படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்தாலும் லிப் லாக் காட்சிகள் போன்றவை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.