இளம் இயக்குனருடன் கைகோர்த்த லேடி சூப்பர் ஸ்டார் – பிரம்மாண்டமாக உருவாகும் நயன்தாராவின் 75வது திரைப்படம்.! வெளியே வந்த தகவல்.

nayanthara
nayanthara

நடிகை நயன்தாரா தமிழில் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு பாராட்டும் படி இருந்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் உடனுக்குடன் வந்தது அந்த வகையில் டாப் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சிம்பு, சூர்யா போன்ற பல நடிகர்களுடன் நடித்து நம்பர் ஒன் நடிக்கையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் நல்ல கதைகளம் அமையும் பட்சத்தில் சோலோ திரைப்படங்களிலும் நடித்து வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தனது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து சினிமாவில் பயணித்து வரும் நயன்தாராவுக்கு சமீபத்தில் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த கையோடு சில நாட்கள் தனது காதல் கணவன் விக்னேஷ் சிவனுடன் ஊர் சுற்றி வந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பிஸியாக இருந்து வருகிறார் அந்த வகையில் நயன்தாரா கையில் தற்போது ஜவான், கனெக்ட், இறைவன், கோல்ட் போன்ற சில படங்கள்..

இருக்கின்ற நிலையில் திருமணத்திற்கு பிறகு நயன்தாராவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்காது என ஒரு பக்கம் பேசி வருகின்றனர். இருந்தாலும் நயன்தாரா தொடர்ந்து சினிமாவில் தனது சிறந்த நடிப்பை கொடுத்து போராடிக் கொண்டுதான் வருகிறார். அந்த வகையில் இந்த படங்களை தொடர்ந்து நயன்தாரா தனது 75வது திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தை புதுமுக இயக்குனர் நிகிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார். இவர் ஷங்கரின் உதவி இயக்குனர் ஆவார். இந்த படத்தை Trident arts – naad studios – Zee studio என மூன்று நிறுவனம் ஒன்றிணைந்து தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்த ஜெய் மற்றும் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.