சமையல்காரியாக மாறும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – என்னடா இது.! நம்பர் ஒன் நடிகைக்கு வந்த சோதனை..

nayanthara
nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனால் தற்பொழுது அனைத்து மொழிகளிலும் நடிக்கிறாரா என்றால் அது கேள்வி குறிதான் ஆம் பெரிதும் தமிழ் சினிமாவில் தான் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்றவர்களுடன் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் சோலோ படங்களிலும் தலைக்காட்டி வருகிறார். அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியான O2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து நயன்தாரா கையில் கனெக்ட், கோல்ட், இறைவன், ஜவான் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த நிகிலேஷ் கிருஷ்ணா நயன்தாராவுக்கு ஒரு சூப்பரான கதையை சொல்லி உள்ளார்.

அது அவருக்கு ரொம்ப பிடித்த போகவே அந்த படம் உறுதியாகி உள்ளது இது நயன்தாராவுக்கு 75 வது திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தை நயன்தாரா தேர்வு செய்ய முக்கிய காரணம் இந்த படம் முழுக்க முழுக்க சமையலை மையமாக வைத்து உருவாகிறதாம் நயன்தாராவுக்கு தற்போது சமையல் மீது ஆசை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதை அதாவது சாதாரண வீட்டில் இருக்கும் ஒரு பெண் சமையலில் மிகப்பெரிய அளவிற்கு உயருகிறார் என்பதே படத்தின் கதை. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 20 கோடி என கூறப்படுகிறது இதில் நயன்தாராவுக்கு மட்டுமே சம்பளமாக 10 கோடி கொடுக்கின்றனர் மீது 10 கோடி பொருட்செலவில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.