‘ஏகே 62’ படத்தில் இணைந்த சன் டிவி சீரியல் நடிகை.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

ak-62
ak-62

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வரும் நடிகர் அஜித் தற்பொழுது ‘ஏகே 62’ திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அதற்கான நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஏகே 62 திரைப்படத்தில் சீரியல் நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிறகு விக்னேஷ் சிவன் ஏகே 62 திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

எனவே மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் சார்பாக சுரேஷ்கரன் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது ஏகே 62. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில் தற்பொழுது படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்பட்டிருக்கும் நிலையில் யாரடி நீ மோகினி உள்ளிட்ட சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சைத்ரா ரெட்டி இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

SAITHRA REDDY
SAITHRA REDDY

தற்போது சைத்ரா ரெட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வரும் நிலையில் ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்து வருகிறார்கள். இவ்வாறு சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி இணைந்துள்ளது உண்மையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.