imman vs sivakarthikeyan : தமிழ் சினிமாவில் என்னதான் புதிய திரைப்படங்கள் வந்தாலும் மிகவும் பரபரப்பாக பேசப்படும் டாபிக் என்றால் அது சிவகார்த்திகேயன் மற்றும் டி. இமான் பிரச்சனைதான். சிவகார்த்திகேயனை சினிமாவில் தூக்கி விட்டது டி. இமான் என்று கூறலாம் அந்தளவு சிவகார்த்திகேயனுக்கு நல்ல பாடல்களை கொடுத்து உறுதுணையாக நின்றார்.
அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அவரை பாட வைத்து அழகு பார்த்தார் கடந்த சில வருடங்களாகவே சிவகார்த்திகேயன் மற்றும் இமான் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வில்லை அதற்கு காரணம் சமீபத்தில் டி இமான் ஒரு பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியிருந்தார்.
அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயனுடன் இனி எத்தனை ஜென்மையும் எடுத்தாலும் இணைந்து பணியாற்ற மாட்டேன் அது ரொம்பவும் கஷ்டம் என கூறியிருந்தார் அதேபோல் சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை என்னால் வெளியே சொல்ல முடியாது என்னுடைய குழந்தைகளின் நலன் கருதி அதனை நான் சொல்ல விரும்பவில்லை என கூறியிருந்தார்.
உடனே டி இமான் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு போன் மூலம் நேர்காணலில் பேசினார் அப்பொழுது சிவகார்த்திகேயன் ஒரு ஜென்டில்மேன் என் குடும்பத்தில் விவாகரத்து குறித்து பிரச்சனை எழுந்த பொழுது சமாதானம் செய்ய பார்த்தார் இமானுக்கு சார்பாக பேசவில்லை அதனால்தான் இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார் எனக் கூறியிருந்தார் டி இமான் பெண் பார்த்துவிட்டு தான் தன்னிடம் வந்து விவாகரத்தை கேட்டார் என ஒரு குற்றம் சாட்டை வைத்தார்.
இந்த நிலையில் பிரபல நடிகை என குட்டி பத்மினி சமீபத்தில் ஒரு நேர்காணலில் இமானின் முன்னாள் மனைவி மோனிகா சொல்வதில் எந்த ஒரு உண்மையும் கிடையாது எனக் கூறி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார் அவர் கூறியதாவது டி இமான் மற்றும் அவரது குடும்பத்திற்கு நாங்கள் நெருங்கிய நண்பர்கள் இமான் குறித்து அவரது முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் கூறியது எந்த ஒரு உண்மையையும் கிடையாது.
ரஜினியை தொடர்ந்து லியோ படம் பார்த்த கமல் ஹாசன்..
தனக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு செலவை இமாம் தான் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதே போல் மோனிகாவிற்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்சத்தை சரியான நேரத்திற்கு கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் தன் வீட்டிற்கு இமான் மற்றும் அவரது தந்தை வந்திருந்த பொழுது இந்த தகவலை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக குட்டி பத்மினி கூறியுள்ளார் இமான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமிலியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
அவரை தங்களின் குடும்பம் தான் இமான் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தது விவாகரத்திற்கு பிறகு தான் அவர்கள் இருவரும் பழக ஆரம்பித்தார்கள் ஆனால் மோனிகா சொல்வது அனைத்தும் பொய் அவர் வேண்டுமென்று பழி சுமத்துகிறார் இமான் மீது என குட்டி பத்மினி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.