Kushi Collection: விஜய் தேவரகொண்டா, சமந்தா இணைந்து நடித்திருக்கும் குஷி திரைப்படம் வெளியாகி வெற்றிப் நடைப்போட்டு வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்த நிலவரத்தை பார்க்கலாம். சிவா நிர்வாணா இயக்க விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
குஷி படம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி அன்று வெளியான நிலையில் கலவை விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. சமந்தா மற்றும் விஜய் தேவர் கொண்டவனை தொடர்ந்து குஷி படத்தில் லட்சுமி, ரோஹினி, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன், Sachin Khedekar உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இவ்வாறு கலவை விமர்சனத்திற்கு மத்தியில் வெளியான இந்த படம் மூன்று நாட்களைக் கடந்திருக்கும் நிலையில் தற்பொழுது வரையிலும் ரூ.70 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்துள்ளது.
விஜய் தேவரகொண்டா குஷி படத்தில் நடிப்பதற்காக 7 கோடி சம்பளம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக விஜய் தேவரகொண்டா ஒரு படத்தில் நடிப்பதற்காக 6 முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறாராம்.
இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லைகர் படம் படும் தோல்வியினை சந்தித்த நிலையில் குஷி திரைப்படத்தின் மூலம் வெற்றினை கண்டுள்ளார். அதேபோல் நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான சாகுந்தலம் படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வினை சந்தித்தது இவரும் குஷி திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.