S. J. Surya : தமிழ் சினிமாவில் இன்று நடிகராகவும், இயக்குனராகவும் வெற்றிகளை கண்டு வருபவர் எஸ் ஜே சூர்யா. இவர் 2000-ம் ஆண்டு எடுத்த குஷி திரைப்படம் அப்பொழுது வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது படத்தில் விஜய், ஜோதிகா, ஷில்பா ஷெட்டி, மும்தாஜ் என பலர் நடித்திருப்பனார் படம் முழுக்க முழுக்க காமெடி ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த படமாக உருவாகியிருந்தது.
குறிப்பாக ஜோதிகா மற்றும் விஜய் வரும் சண்டை போடும் காட்சிகள் மற்றும் ரொமாண்டிக் சீன் மற்றும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, ஜோதிகாவின் இடுப்பை ஓரக்கண்ணால் விஜய் பார்ப்பது போன்றவை ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின.
குஷி படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ் ஜே சூர்யாவுக்கு காசுகளை அள்ளிக் கொடுத்தாராம் எஸ்.ஜே. சூர்யாவும் பிறகு தன்னுடன் பணியாற்றிய ஏழு பேருக்கு பைக் வாங்கி கொடுத்தார் அதில் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் மாரிமுத்துவும் வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஷி படத்தில் வரும் இடுப்பு சீன் எடுக்க மூன்று நாட்களில் ஆகியது குறித்து எஸ் ஜே சூர்யா பேசிய உள்ளார்.. பிளைட் போகும்போது அந்த சீனுக்காக ஒரு நாள் முழுக்க வெயிட் பண்ணி எடுத்தேன் பின்னர் எல்லாமே அந்த சவுண்டு வச்சி சரி பண்ணிக்கிட்டோம்.. எல்லோரும் எவன்டா இவன் க்ளோசப் சீனுக்கு மூணு நாள் எடுக்கிறான்னு திட்டுனாங்க ஆனால் அந்த பொறுமை உழைப்பு தான் இன்று வரை எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.