Kushi : இயக்குனர் சிவா நிர்வானா இயக்கத்தில் தெலுங்கில் வெளியாக உள்ள “குஷி” திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. இத் திரைப்படத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். இயக்குனர் சிவா நிர்வானா இதற்க்கு முன்பு மூன்று திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
” குஷி ” திரைப்படத்தின் ட்ரெய்லர்கள் மற்றும் போஸ்டர்கள் அனைத்தையும் பார்த்தால் தமிழில் மணிரத்தினம் இயக்கி வெளியான “அலைபாயுதே” திரைப்படத்தின் பிரதிபலியாக இருக்கிறது என்று பல நெட்டிசன்களால் பேசப்பட்டு வருகிறது.
இதற்கான சரியான விளக்கத்தை இயக்குனர் சிவா நிர்வானா ‘இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தெளிவுபடுத்தி உள்ளார். அதில் அலைபாயுதே திரைப்படம் மட்டுமல்ல காதல் சார்ந்த அனைத்து திரைப்படங்களையும் அலசி பார்த்தால் பெரும்பாலும் ஒரே விஷயங்களை தான் தெளிவுபடுத்தும்.
ஆனால் இந்த படத்தில் “காதல் மற்றும் திருமண ஜோடிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை வித்தியாசமான முறையில் தெளிவுப்படுத்துகிறது இப்படம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.