தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு 1988 ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து வருஷம் 16, வெற்றிவிழா, கிழக்கு வாசல் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் கமல்ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அந்த காலத்தில் குஷ்பு தான் பலரின் கனவு கன்னியாக இருந்தவர்.
நடிகை குஷ்பூ தமிழ் மட்டுமல்லாமல் கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த நிலையில் குஷ்பு ரனதீர என்ற கன்னட திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் நடிகர் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடித்திருந்தார்.
ரணதீர திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததால் அதன்பிறகு ரவிச்சந்திரனின் ஒரு சில திரைப்படங்களில் குஷ்பூ நாயகியாக நடித்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதுமட்டுமில்லாமல் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய நாட்டுக்கு நல்லவன் என்ற திரைப்படத்திலும் ரவிச்சந்திரன் குஷ்புவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் குறித்து பழைய நினைவுகளை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் குஷ்பு.
அதில் அவர் கூறியதாவது ரவிச்சந்திரனுடன் நான் நடித்த முதல் கன்னடப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் கன்னட சினிமாவில் ஒரு பகுதியாக நான் இருந்தேன் ரவிச்சந்திரன் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் இன்னும் நான் தொடர்பில் இருக்கிறேன்..
நாங்கள் மிகச் சிறந்த ஜோடி என்பது ரசிகர்கள் இன்னும் மனதில் வைத்து இருக்கிறார்கள் அந்த எதிர்பார்ப்பை நான் ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்பட வாய்ப்பு அமைந்தால் ரவிச்சந்திரனுடன் மீண்டும் நடிப்பேன் என கூறியுள்ளார்.