நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் 1988ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து வருஷம் 16, வெற்றிவிழா, கிழக்கு வாசல், நானும் இந்த ஊருதான், நடிகன், மை டியர் மார்த்தாண்டன், என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் அப்பொழுது உள்ள முன்னணி நடிகர்களான பிரபு, ரஜினி, சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
அதேபோல் அந்த காலத்தில் குஷ்பு என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் அந்த அளவு தனது அழகால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தார். இந்த நிலையில் குஷ்பு தற்பொழுது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
குஷ்பு நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் முழு ஈடுபாடுடன் இறங்கியுள்ளார் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது தீவிரமாக பாஜகவில் செயல்பட்டு வருகிறார் சினிமா, அரசியல், டிவி நிகழ்ச்சி என மிகவும் பிஸியாக இருந்தாலும் குடும்ப பொறுப்பான குடும்ப தலைவியாகவும் தனது கடமையை தவறியதே கிடையாது. அதேபோல் சமூக வலைத்தளத்தில் தனது கணவர் சுந்தர் சி மகள் அவந்திகா மற்றும் அனந்திதா ஆகியோர்களைப் பற்றிய அப்டேட்களை குடும்ப புகைப்படத்தையும் அவ்வப்போது வெளியிட்டு வருவார்.
அதேபோல் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு வரும் குஷ்பு சில புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் மஞ்சள் நிற புடவையில் பழைய நிலைமைக்கு மாறிய குஷ்பு வாக இந்தப் புகைப்படத்தில் ஜொலிக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் பல ரசிகர்களும் ரசித்து வருகிறார்கள்.