தென்னிந்திய சினிமாவிலேயே ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. குஷ்பு என்றால் அப்பொழுது உள்ள ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இவர் அப்பொழுது உள்ள ரஜினி, சத்யராஜ், பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.
குஷ்புவின் மீது உள்ள ஆசையால் ரசிகர்கள் பலரும் குஷ்புவிற்கு கோவில் கட்டி கொண்டாடிய காலமும் உண்டு. இவர் இருபதாம் நூற்றாண்டில் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் சுந்தர்-சி யை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு முழுநேர அரசியல்வாதியாக தன்னை மாற்றிக்கொண்டார் தற்போது மீண்டும் குஷ்பூ ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். குஷ்புவிற்கு திரைப்படத்தில் என்ன கதாபாத்திரம் என்பது இதுவரை பலருக்கும் தெரியாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.
குஷ்பூ சுந்தர் சி திருமணம் செய்துகொண்ட பிறகு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்பு குஷ்புவின் இரண்டு பெண் குழந்தைகளும் மிகவும் குண்டாக உடல் எடை அதிகரித்து காணப் பட்டு இருந்தார்.
ஆனால் தற்பொழுது பலரும் வியக்கும் அளவிற்கு அதிரடியாக தங்களது உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார் அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.