kuruvi : 2008 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் குருவி. இந்த திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தார், விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் சுமன், விவேக், மணிவண்ணன், மாளவிகா என பலரும் நடித்து இருந்தார்கள், இந்த திரைப்படத்திற்கு வித்யாசாகர் தான் இசையமைத்திருந்தார்.
குருவி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற வில்லை. இருந்தாலும் ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் திரைப்படமாகவே அமைந்தது, இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தது திரிஷா இல்லை என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
முதன் முதலில் நாயகியாக நடிப்பதற்கு நயன்தாராவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போனதால் திரிஷாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாம்.
ஒருவேளை இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்குமொ என ரசிகர்கள் கூறுகிறார்கள்.