தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். முதலில் இவர் 2002 ஆம் ஆண்டு உருவான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை ஆரம்பித்தார். அப்பொழுது இவரை பலரும் கிண்டலும் கேலியும் செய்துள்ளனர் ஆனால் அந்த அவமானங்களை எல்லாம் தாங்கி கொண்டு..
அடுத்தடுத்த நல்ல படங்களில் தனது நடிப்பு திறமையை காட்டி வெற்றியை கொண்டாடினார். அந்த வகையில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், கர்ணன் என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு படங்களில் நடித்தவாறு சினிமா உலகில் வெற்றியை காணும் நடிகர் தனுஷின் உண்மையான பெயர் இது கிடையாதாம்.
அவருடைய உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு சினிமாவில் வருவதற்கு முன் ஒரு நல்ல பெயரை தேர்ந்தெடுத்து தனது பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார். இந்த நிலையில் தான் கமலின் குருதிப்புனல் படத்தை பார்த்த அவருக்கு அந்த படத்தில் இடம்பெற்ற தனுஷ் என்கின்ற கேரக்டரை ரொம்பவும் பிடித்து போயிருந்தது.
குருதிப்புனல் படத்தில் எதிரிகள் கேங்கில் உளவு பார்க்கும் தனுஷின் கேரக்டரை போலவே பெயரும் பிடித்து போனதாம் இதனால் வெங்கடேஷ் பிரபு என்கின்ற பெயரை மாற்றி தனுஷ் என வைத்து கொண்டாராம். பிறகு அப்பா கஸ்தூரிராஜா சம்மதத்துடன் தனுஷ் என்கின்ற பெயரில் சினிமா இண்டஸ்ட்ரியில் அறிமுகமானார்.
அந்த பெயர் அவருக்கு ரொம்ப சூட்டாக மாறியது மேலும் அந்த பெயரை வைத்து நடித்து பல வெற்றிகளை கண்டு தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக ஓடிக் கொண்டிருக்கிறார். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.