பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை, நந்தினி ஆகியோர்கள் அணிந்திருந்த நகைகள் தற்போது விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாக மக்கள் அந்த நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதாவது கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் தற்பொழுது மணிரத்தினத்தின் முயற்சியினால் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது மேலும் இந்த படத்தின் முதல் பாகம் வருகின்ற 30ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ள நிலையில் தற்போது புரமோஷன் பணிகளில் பிரபலங்கள் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
மேலும் இந்த படத்தில் நடிகர்கள் கார்த்திக், ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன் நடிகை திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தின் ஆடியோக்கள், கதாபாத்திரங்களின் போஸ்டர், ட்ரைலர் ஆகியவை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் ஒரு காலகட்டத்தில் நடிகைகள் திரைப்படங்களில் அணிந்திருக்கும் சேலைகள், பிளவுஸ்கள், நகைகள் ஆகியவை வைரலாகும் இதனை மக்கள் தேடி வாங்குவதையும் வழக்கமாக வைத்திருந்தார்கள்.
அந்த வகையில் சரோஜா தேவி அணிந்த சேலைகள் சரோஜா சேலைகள் என்று விற்கப்பட்டது. அதன் பிறகு நதியா கம்மல் நதியா, வளையல் ஆகியவை பிரபலமானது சின்னத்திரையின் வளர்ச்சிக்கு பிறகு குஷ்பூ ஜாக்கெட் பிரபலமானது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது பொன்னியின் செல்வனின் சோழ நகைகள் பிரபலமாகியுள்ளது அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக திரிசாவும், நந்தினியாக ஐஸ்வர்யாராயும் நடித்துள்ளார்கள்.
அந்த வகையில் இவர்கள் நிறைய நகைகளை அணிந்து இருப்பார்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் நிறைய நகைகள் அணிவது வழக்கம் அதேபோல் இந்த படத்திலும் சுமார் 2 கிலோ நகைகளை ஒவ்வொருவரும் அணிந்து இருக்கிறார்கள். அந்த வகையில் சோழர்கால கல்வெட்டில் இருக்கும் நகைகள் குறித்தும் சிற்பங்களிலும் ஆய்வு செய்து நிஜமான நகை கலைஞர் உருவாக்கியவை ஒரு சில நகைகள் தங்கத்திலும், ஒரு சில நகைகளை முன்னிலும் இன்னும் மற்ற சில நகைகள் கவரிங் நகைகளாக உருவாக்கப்பட்ட இருக்கிறது.
எனவே தற்போது இந்த நகைகளை உருவாக்கி விற்பதற்கு தீவிரம் காட்டி வருகிறது அந்த வகையில் இந்தியா முழுக்க பரவி வரும் முன்னனி நகைக்கடை நிறுவனம் ஒன்று தி சோழாக் என்ற பெயரில் இதனை தொடங்கியுள்ளது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகளை ஏலம் விட பட தயாரிப்பு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் புடவைகளும் ஏற்கனவே விற்கப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.