தமிழ் சினிமாவில் முதன் முதலில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் 2012ம் ஆண்டு அறிமுகமானார் லக்ஷ்மி மேனன் அதனைத் தொடர்ந்து கும்கி குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
சமீப காலமாக பல இளம் நடிகைகள் சமூக வலைதளத்தை பயன்படுத்தி பிரபலமாகி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் நடிகைகளிடம் சமூக வலைதளத்தில் தவறான முறையில் நடந்து கொள்வது ஆபாசமாக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.
அதற்கு ஒரு சில நடிகைகள் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ரசிகர்களை திட்டினாலும் ஒரு சில ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து வருகிறார்கள். அந்தவகையில் லட்சுமிமேனன் தற்போது தன்னிடம் கவர்ச்சி புகைப்படங்களை கேட்ட ரசிகரை வெளுத்து வாங்கிவிட்டார்.
லக்ஷ்மி மேனன் மிகவும் போல்டாக கூறியுள்ளதால் சக நடிகைகள் ஆடிப் போய்விட்டார்கள். லட்சுமிமேனன் சமீபகாலமாக சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்துவருகிறார். இந்த நிலையில் இவர் ஆரம்ப காலகட்டத்தில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
ஆனால் ஒரு காலகட்டத்தில் இவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் தான் விட்ட படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் நுழையலாம் என படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். அதன்பிறகு லட்சுமி மேனன் சினிமாவிற்கு வரமாட்டார் என பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
அப்படி இருக்கும் வகையில் மீண்டும் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார் லட்சுமி மேனன் அதாவது புலிகுத்தி பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். லட்சுமி மேனன் மீண்டும் குடும்ப கதாபாத்திரத்தில் நடித்த உள்ளதால் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.
அதிலும் புலிகுத்தி பாண்டி என்ற திரைப்படத்தில் லட்சுமி மேனன் கிளைமாக்ஸ் காட்சியில் மிரட்டியுள்ளார். அந்தக் காட்சியில் இருந்து இவருக்கு பட வாய்ப்பும் அதிகமாக வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் லட்சுமி மேனன் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளித்துள்ளார்.
அப்பொழுது ரசிகர் ஒருவர் லட்சுமிமேனனிடம் உங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை கேட்டுள்ளார் அதற்கு மிகவும் டென்ஷனாகி விட்டார் லட்சுமிமேனன் உடனே கெட்டவார்த்தையில் அந்த ரசிகரை திட்டி ஓபனாக பேசிய விட்டார். இதனால் இவரை பார்த்த மற்ற நடிகைகளும் லட்சுமிமேனனின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.