குல்தீப் யாதவ் இந்திய அணியில் வாய்ப்பை பிடிக்காமல் தட்டு தடுமாற காரணமே.. இந்த இரண்டு வீரர்கள் தான்.? உண்மையை உடைக்கும் இளவயது பயிற்சியாளர்.

kuldeep yadav
kuldeep yadav

இந்திய அணியில் இளம் நட்சத்திர பந்துவீச்சாளராக விளங்கியவர் குல்தீப் யாதவ் எப்பொழுது எல்லாம் இவர் பவுலிங் போட வருகிறாரோ அப்போதெல்லாம் விக்கெட் எடுத்துக் கொடுத்து அசத்துவார். அதுதான் குல்தீப் யாதவ் என்றாலும் கூட.. பந்து வீச்சு மிக ஸ்லோவாக இருந்தாலும் அவர் பலவிதமான டெக்னிக்கை வைத்து வீசுவதால் அவரது பந்தை அடிக்க பலரும் திணறுவார்கள்.

அதேசமயம் அவர் வீசும் ஒவ்வொரு பந்துக்கும் விக்கெட் விழுவது போல இருப்பதால் இந்திய அணியில் நல்ல இடம் பிடித்தார் ஆம் 2017ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி  இந்திய அணியில் தவிர்க்க முடியாத நாயகர்களாக வலம் வந்தனர். இப்படி ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் வாய்ப்பு கிடைக்காமல் திணறி வருகிறார்.

இந்திய அணியில் தான் கிடைக்கவில்லை என்றால் ஐபிஎல் போட்டிகளில் கூட வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில்  உட்கார்ந்து வருகிறார் இதனால் அவரது கிரிக்கெட் கேரியர் ரொம்ப மோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுவரை குல்திப் யாதவ் இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகள் 65 ஒருநாள் போட்டி 20 ஓவர் 23 போட்டிகளிலும் விளையாடி உள்ளார் அவர் மொத்தம் 170 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

குல்தீப் யாதவ் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு அவருக்கு இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை மேலும் ஒரு சில போட்டிகளில் அவர் பங்கு பெற்றாலும் விளையாட முடியாமல் உட்கார்ந்து இருந்தார். இந்திய இந்திய அணியில் வாய்ப்பு பறிபோனது குறித்து அவரது  இளம்வயது பயிற்சியாளரான கபில்தேவ் பாண்டே கூறி உள்ளார்.

குல்தீப இந்திய அணியில் இடம் பிடித்து சிறப்பாக பந்து வீசினார். அதே சமயம் ரவிந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் மறுபக்கம் ஒரு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன்   காரணமாகவே அவருக்கு வாய்ப்புகள் அப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது மேலும் ஒரு சில போட்டிகளில் இவர் விக்கெட்டை விழுந்ததால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மத்தியில் நம்பிக்கை இழந்து உள்ளார் என கூறினார் மேலும் சமீபகாலமாக பெஞ்சில் மட்டுமே உட்கார வைத்து உள்ளதால் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது தட்டுத்தடுமாறி வருவதாக கூறினார்.