மலையாள சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ள சிவாங்கி.! அதுவும் மோகன்லால் படமா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிவாங்கி.இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்து இருந்தாலும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என்று அனைவர் மத்தியிலும் புகழை வாங்கித் தந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி என்றுதான் கூறவேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகள் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. அதுவும் இவருடைய குரல் கீச் என்று இருப்பதால் இவரை பலரும் கிண்டல் செய்வதும் வழக்கமாக இருக்கிறது இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெரும்பாலானோருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வீட்டிலேயே இருப்பதால் யூட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அவரே பாடி வீடியோக்களை வெளியிடுவது மற்றும் குக் வித் கோமாளி மற்றும் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் சந்தோஷமாக கொண்டாடிய வீடியோக்கள் என்று பலவற்றையும் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.

இந்நிலையில் மலையாளத்தில் மோகன்லால் ஜெய பிரதா இவர்களின் கூட்டணியில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த பிராணயம் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாட்டில் ஈ பாட்டில் என்ற பாடலை சிவாங்கி தனது பிறந்தநாளை முன்னிட்டு பாடி அதை யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகபடியான லைக்குகளை பெற்றது தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த ஆர்டிகல் 15 திரைப் படத்தின் ரீமேக்கில் பாடல் பாட உள்ளார்.